நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சமூக நலப் பேரவை சார்பில் அவரது 97வது பிறந்தநாள் மற்றும் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நாடார் திருமண மஹாலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் நடிகர் திலகம் நடித்த திரைப்படத்திலிருந்து மாணவ மாணவியர்கள் நடனமாடினார்கள் பேச்சுப்போட்டி ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.