புதுக்கோட்டையில் பைக்குகள் மோதி விபத்து

61பார்த்தது
புதுக்கோட்டையில் பைக்குகள் மோதி விபத்து
புதுக்கோட்டை ஒத்த தெருவை சேர்ந்த மாரிக்கண்ணு (33). இவர் தனது வீட்டிலிருந்து கடைவீதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, புதுக்கோட்டை ஒத்த தெரு கிளை சாலையில் அவருக்கு எதிரே, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாரிகண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி