புதுகை, தேகாட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பவித்திரன் (19) என்பவர் லேனா விளக்கிலிருந்து புதுகை மருத்துவக் கல்லூரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனத்தை ஒட்டி வந்த நபர் மோதியதில் பவித்திரனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதுகுறித்து அவரது உறவினர் அளித்த புகாரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.