புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் வரும் 15ஆம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது இந்த முகாம் தபால் அலுவலகங்களில் மட்டும் அல்லாமல் பள்ளிகள் கல்லூரிகள் ஊராட்சிகள் மற்றும் ஆதார் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களிலும் தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.