புதுக்கோட்டை அண்ணா சிலைக் கூண்டின் மீது திங்கள்கிழமை மது போதையில் இளைஞர் ஒருவர் ஏறிப் படுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தாம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர், திங்கள்கிழமை பகலில் அண்ணாசிலைக் கூண்டில் ஏறிப் படுத்துக் கொண்டார். இதுகுறித்து நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து அவரை கீழே இறக்கி விசாரித்தனர்.
மது போதையில் கூண்டில் ஏறி படுத்துக் கொண்டது தெரியவந்தது. அவரை எச்சரித்த
போவீஸார் ஊருக்கு அனுப்பி வைத்தனர்