புதுக்கோட்டையை அடுத்த முத்துக்குன்பட்டியை சேர்ந்த மெய்யர் (60) என்பவர் நேற்று டீ குடிப்பதற்காக இச்சடி என்ற இடத்தில் தஞ்சாவூர் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார் அப்போது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற கார் மோதியதில் மெய்யர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே விபத்து பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இறந்தவரின் உருவினர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர் கணேஷ் நகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். விபத்து குறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.