7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்!

72பார்த்தது
7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்!
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா தலைமையில் இன்று (27. 07. 2024) தொடங்கி வைத்து, அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டார்கள். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை , மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி