புதுகை மக்கள் நீதிமன்றங்களில் 1602 வழக்குகள் தீர்வு!

57பார்த்தது
புதுகை மக்கள் நீதிமன்றங்களில் 1602 வழக்குகள் தீர்வு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 1, 602 வழக்குகளுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டு, முடித்து வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளாகவும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் 12
அமர்வுகளாகவும் என மொத்தம் 20 அமர்வுகளில் நடைபெற்றன. மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜி. சுபத்ராதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட குடும்பநல நீதிபதி எஸ். ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. எம். வசந்தி, அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிபதி ஏ. கே. பாபுலால், முதன்மை குற்றவியல் நடுவர் எஸ், சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பூர்ணிமா, குற்றவியல் நடுவர் - 1 என். விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 4, 773 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் 1, 602 வழக்குகளுக்கு சுமுகத் தீர்வுமாவட்டம் முழுவதும் மொத்தம் 4, 773 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் 1, 602 வழக்குகளுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ. 4. 03 கோடி மதிப்பில் தீர்வும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலரும், சார்பு நீதிபதியுமான இ. ராஜேந்திரகண்ணன் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி