வேங்கை வயல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆங்காங்கே பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், வேங்கை வயலில் உண்மையான குற்றவாளியை கைது செய்ய கோரி, மக்கள் தேசம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் செய்த 16 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.