புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே குளத்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண். அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து அதற்கு மேல் படிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்தவர் கடைக்கு செல்வதாக கூறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆதனக்கோட்டை காவல்துறையில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.