புதுகை: கருகத் தொடங்கிய மஞ்சள் பயிர்: விவசாயிகள் வேதனை!

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட இடப்பரப்பில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். மஞ்சள் பயிர்கள் செழித்து வளர்ந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் அதிக அளவில் தேங்கியது. விவசாயிகள் மழை நீரை வடிய செய்தாலும் அதன் பாதிப்பால் மஞ்சள் பயிரின் இலைகள் கருகத் தொடங்கியுள்ளன. பொங்கல் நெருங்கும் நிலையில் மஞ்சள் பயிர் கருகுவது விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி