ஓட்டுனரை மூன்று நபர்கள் சேர்ந்து தாக்குதல்!

2592பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் கணேசா என்ற தனியார் பேருந்தில் ஓட்டுனராக பனிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மநாபன் மன்னார்குடியிலிருந்து கறம்பக்குடி நோக்கி தனியார் பேருந்தை ஓட்டி செல்லும் போது கறம்பக்குடி கடைவீதியில் இருசக்கர வாகனம் சாலையின் நடுவே நின்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் இருசக்கர வாகனத்தை இடித்து சென்றதாக கூறி தனியார் பேருந்து ஓட்டுனர் பத்மநாபனை மூன்று நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் வீடியோ பேருந்தின் உள்ளே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஓட்டுனர் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவால் பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடைவீதி வழியாக பேருந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து காவல் துறை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி