புள்ளான்விடுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முதல் இன்று வரை மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புள்ளான்விடுதி இருந்து வடகாடு செல்லும் சாலை மழையின் காரணமாக சாலை பழுதடைந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மழை நீரில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழும் சூழல் நிலவுகிறது. இதற்காக வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.