புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி பங்கு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் 75 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட பேரரருட் சகாயராஜ் ரிப்பன் வெட்டி புதுப்பிக்கப்பட்ட புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தை திறந்து வைத்த நிலையில் ஏரளான கிறிஸ்தவ பொதுமக்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தூய விண்ணேற்பு அன்னை ஆலயம் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலயம் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலயம் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பேரூட் தஞ்சை மறை மாவட்ட நிர்வாகி சகாயராஜ் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் பின்னர் தச்சங்குறிச்சி பங்கு தந்தை பால்ராஜ் மற்றும் பேரூட் தஞ்சை மறை மாவட்ட நிர்வாகி சகாயராஜ் தலைமையில் மழை வேண்டி விவசாயம் செழிக்கவும் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் ஜாதி மத இன பாகுபாடு இன்றி பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி