மணல் திருட்டு: டிப்பர் லாரி பறிமுதல்.

268பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ராசாப்பட்டி பகுதியில் சிலர் டிப்பர் லாரியில் கிராவல் மண் திருட்டில் ஈடுபடுவதாக நேற்று வெள்ளனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, வெள்ளனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அனந்தராமன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள செட்டியார் ஊரணி அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிப்பர் லாரியின் உரிமையாளரும், டிரைவருமான முத்துச்சாமி மகன் முருகனை வலை வீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி