புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல் குளத்தில் வரும் 9ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்குகிறார். இதை முன்னிட்டு வரும் 1ஆம் தேதி முதல் பொதுமக்களிடமிருந்து மனுக்கள், செத்துவாசல்பட்டி கிராம சபை கூடத்தில் பெறப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.