புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை ஊராட்சிக்குட்பட்ட ஆவடையாங்காட்டில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் 3 சுனைகள் உள்ளது. இந்த சுனையிலிருந்து தண்ணீர் எடுத்து அப்பகுதியை சேர்ந்த 20 விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இடத்தை யார் அனுமதியும் இன்றி ஊராட்சி தலைவர் பணத்தை பெற்றுக்கொண்டு தனி நபருக்கு பட்டா வழங்கி விட்டதாக கூறி மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.