புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அடுத்த கழனிப்பட்டியைச் சேர்ந்த சிவசாமி (45), சிவனேசன் (15) ஆகிய இருவரும் மலையூரில் இருந்து கழனிபட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிரன்விடுதி பாலம் அருகே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்த சிவனேசன் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். சிவசாமி அளித்த புகாரில் மலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.