முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கநம்பக்குடி , வாண்டான்விடுதி கிராமத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளை, கந்தர்வகோட்டை எம்எல்ஏ. , எம். சின்னத்துரை நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது இருக்கின்ற நீர் ஆதாரத்தை பயன்படுத்தி, ஊடுபயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் படி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.