குன்றாண்டார் கோவில் சாலையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 41 ஜோடி குதிரைகள் கலந்து கொண்டனர். பந்தயத்தின் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளருக்கு வெற்றிக்கோப்பை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.