புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மண்டேலா நகர் 2ஆவது தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கடந்த மாதம் 16ஆம் தேதி இரவு நன்கு குடித்துவிட்டு கயிறு கட்டிலில் பீடி குடித்தவாரு மயங்கி விட்டார். தலையணையில் பற்றிய தீ மளமளவென எரிந்தது. 70% காயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று (அக் 29) இறந்து போனார். மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்கின்றனர்.