புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மழையூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் வேலன் மகன் சின்னச்சாமி (65). இவர், நேற்று முன்தினம் மழையூரில் அதிரான்விடுதி பிரிவு சாலை அருகே சாலையோரம் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்து சாலையில் கீழே மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சின்னச்சாமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, நேற்று சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில், மறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.