புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்பு கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் சலூன் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன். இவரது, வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்டு வீட்டிலிருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.