ஆடி வெள்ளியை முன்னிட்டு 108 பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்குபூஜை வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே மிகப் பழமை வாய்ந்த ஆலயமாகவும் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் ஸ்ரீ புலிமேல்கருப்பர் ஸ்ரீ அரையகருப்பர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவப்பூர் ஆடி மாத விளக்கு பூஜை விழா குழு சுப்பையா லட்சுமியாயி குடும்பத்தார்களான வி. எஸ். ஷங்கர் பாக்கியலட்சுமி சார்பில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட சுமங்கலி பெண்கள் மாங்கல்ய பூஜை திருமணவரன் தங்களது இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு ஸ்ரீ புலிமேல்கருப்பர் ஸ்ரீஅரைமேல் கருப்பர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கப்பட்டது
மேலும் இந்த சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சுமங்கலி பொருட்களான வளையல் மஞ்சள் குங்குமம் வழங்கி சிறப்பிக்கபட்டது.