சாலையை சரிசெய்ய வேண்டும் என்று கிராம மக்களும் பாரதிய ஜனதா கட்சியினரும் இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே காத்திருப்பு போராட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே தாழனூர் ஊராட்சியை சேர்ந்த கண்ணாகூர் கிராமத்தினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் இணைந்து சாலையை சரி செய்ய வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அரசு அதிகாரிகள் யாரும் வராததால் காலை 9 மணியிலிருந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது அவர்களிடம் கேட்டபோது இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் எங்களிடம் என்ன குறை என்று கேட்கவில்லை அரசு அதிகாரிகள் வரும் வரை எங்கள் கிராமத்திற்கு சாலையை சரி செய்தால் தான் காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்.