டாஸ்மார்க் அகற்ற கோரி மறியல் பெருங்காடு கிராம மக்கள் முடிவு!

85பார்த்தது
அறந்தாங்கி அருகே பெருங்காடு ஊராட்சியில் 2 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கடைகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
போராட்டக்குழு சாத்தர் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்- ரவி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெருங்காட்டில் இயங்கி வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்றவும், பெருங்காட்டில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்ககோரியும் கிராமமக்கள், சுய உதவி குழு பெண்கள், மாணவர்கள், சமூக ஆர்வ லர்கள், விவசாயிகள், கூலி தொழிலா ளர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் சார்பில் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு பெருங்காட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி