புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகுடி, பெருங்காடு, கூத்தங்குடி, வெட்டி வயல் மேலப்பட்டு மற்றும் திருமயம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது திடீர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென்று மழை பெய்திருப்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்ஏற்பட்டுள்ளது.
இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.