புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாயக்கர்பட்டி பகுதியில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற அறந்தாங்கி காவல் துறையினர் அப்பகுதி உள்ள கெமிக்கல் தொழிற்சாலை அருகே அந்த மகேந்திரா வண்டியை நிறுத்தி சோதனை செய்து அதில் அரை யூனிட் மணல் இருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர் பாலா, விஜய், நந்தகுமார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.