பள்ளி மாணவி மாயம்: தாய் போலீசில் புகார்.

4834பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மேலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ஐஸ்வர்யா (17). இவர் சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப். 26ம் தேதி வீட்டிலிருந்த ஐஸ்வர்யா திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால் ஐஸ்வர்யா கிடைக்காததால் இது குறித்து அவரது தாய் கலைவாணி (37) அறந்தாங்கி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மனோகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி