பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை!

54பார்த்தது
பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை!
மணமேல்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வடக்கூர் அம்மன் கோயில் சாலை, உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில் சாலை, அக்ரஹாரம் சாலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை, கடற்கரை சாலை என்று பல்வேறு சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டன. மேலும், மழை காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி