ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மழை வேண்டியும், மக்கள் நலம் பெற வேண்டியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கஞ்சி கலயம் சுமந்தும் கையில் தீச்சட்டி ஏந்தியும் ஆதிபராசக்திக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி இன்று கஞ்சிகலயங்களை ஆதிபராசக்தி தொண்டர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.