புதுகை: புதிய பஸ் நிலையம் முதல்வரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

63பார்த்தது
புதுகை: புதிய பஸ் நிலையம் முதல்வரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்
அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அறந்தாங்கியில் பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தார். 

அறந்தாங்கி ஆவடையார் கோவில் மணமேல்குடி தாலுக்கா மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அறந்தாங்கி நகரின் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளையும் நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் பயனடையும் வகையில் பூங்கா அமைத்திடும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

தொடர்புடைய செய்தி