புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கட்டுமாவடி மீனவர் தெருவை சேர்ந்தவர் ராஜா (27). இவர் மணமேல்குடி கட்டுமாவடி முருகன் கோவில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மணமேல்குடி காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 60 கிராம் மதிப்புள்ள போதைப் பொருளையும் ரூ. 1800 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.