வளர்ச்சிப் பணிகள்: கலெக்டர் ஆய்வு!

64பார்த்தது
வளர்ச்சிப் பணிகள்: கலெக்டர் ஆய்வு!
அறந்தாங்கி ஒன்றிய பகுதிக பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். சிலட்டூர் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் சுனையக்காடு அரசு உயர்நி லைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு துணைத் தேர்வுகள் எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடப்பதை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாலை யவனம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தூய்மை செய்யும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். கிராமப்புற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப் தாப் ரசூல், அறந்தாங்கி ஆர்டிஓ சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பரமசிவம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி