அறந்தாங்கியில் பிரசித்திபெற்ற வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் 6ம் நாளாக நேற்று வர்த்தக சங்கத்தின் சார்பாக வர்த்தக சங்கத் தலைவர் காமராஜ், செய லாளர் தவசு மணி, பொருளாளர் சேக் அப்துல்லா முன்னிலையில் ஏராளமானோர் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, கரும்பு தொட்டி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபாடு நடத்தினர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் கார்த்திகேயன் மற் றும் மாகாணத்தார்கள், மண்டகப்படிதாரர்கள் செய் திருந்தனர்.