புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி கடைத்தெருவில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.