புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஈச்சங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்பல விநாயகர் மற்றும் ஸ்ரீ திருவேங்கடமுடைய அய்யனார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பயந்தன.