புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகில் உள்ள விசூர் கண்மாயில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட சாய்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் விசூர் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு இருந்தவர் எப்படி ஏரியில் விழுந்தார் என்பது தெரியவில்லை. அவரது உடலை ஏம்பல் காவல் துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.