புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அலியாநிலை வருவாய் கிராமத்தில் இலங்கைதமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.