புதுக்கோட்டை, அறந்தாங்கி ஊராட்சி குளத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2021-2022ம் ஆண்டில் ரூ. 23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.