அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் கண்ணன், நாச்சியப்பன் ஆகியோர் நேற்று இரவு (செப். 5) ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கண்ணன் பீர் பாட்டிலால் நாச்சியப்பனை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாச்சியப்பன் அருகில் கிடந்த கல்லை எடுத்து கண்ணன் தலையில் போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.