புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே
ஆளப்பிறந்தான் கிராமம் உள்ளது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் உள்ள புளிய மரத்தில் பைக் மோதிய விபத்தில் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள்
போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், இறந்தவர் காரைக்குடியை
சேர்ந்த சங்கர் மகன் வினோத் வயது (30) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக அறந்தாங்கி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.