புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஈச்சங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்பலவிநாயகர் மற்றும் ஸ்ரீதிருவேங்கிடமுடைய அய்யனார் திருக்கோயில் மாசிமக உற்சவ திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டுமாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டிகள் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தை இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன. பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் மூன்று லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் சிறப்பு கோப்பைகளும் வழங்கப்பட்டன. பந்தை நிகழ்ச்சியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். பந்தயத்திற்கு ஆவுடையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.