சிறுமியை கடத்தி சென்ற இருவர் மீது வழக்கு!

532பார்த்தது
சிறுமியை கடத்தி சென்ற இருவர் மீது வழக்கு!
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 2 இளைஞர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழாண்டு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ்-1 சேர இருந்தார்.

சிறுமியை இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் இருந்து காணவில்லையாம். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து கீரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கொத்தக்கோட்டை அம்மயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த அரங்குளவன் மகன் ராமராஜ் (24), கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் முருகேசன் (23) ஆகிய இருவரும் சிறுமியை கடத்திச் சென்று தலைமறைவானது தெரியவந்தது.

தொடர்ந்து, கீரமங்கலம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து சிறுமி, கடத்திச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி