ஆலங்குடி பேரூராட்சிக்கு வாகனம் வழங்கிட அமைச்சர் வருகை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு இன்று 15ஆவது நிதிகுழு நிபந்தனை மானிய 2022-2023 திட்டத்தில் ரூ. 9.70 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மற்றும் கலைஞர் நகர் புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2024 ரூ. 10.66 லட்சம் மதிப்பீட்டில் மின்கலன் வாகனம் ஆகியவற்றை தூய்மைப் பணியாளர்களுக்குத் துவங்கி வைக்க ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொள்கிறார்.