ஆலங்குடி: சாலையை ஆய்வு செய்த அமைச்சர்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பாழடைந்த தார்சாலை, மண்சாலை, கப்பிச்சல்லி சாலைகளை ஆய்வு செய்தார். அப்பகுதியில் கடந்த வாரம் கோடி ரூபாய் 61 லட்சத்தில் புதிய தார்சாலைகளை அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பணிகள் நடைபெறும் நிலையில் சாலைகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.