ஆலங்குடி அருகே நடவு பணியில் விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து பகுதியில் உள்ள ஏரி குளங்கள் நீர்நிலை உயர தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆலங்குடியில் நடவு நடும் வேலைகள் தொடங்கியுள்ளது. விவசாயிகள் மனநிறைவுடன் வேலைகளை தொடங்கினர். இதில் பெண்கள் பாடல்படி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வேலைகளை மனமகிழ்ச்சியுடன் தொடங்கினர்.