கறம்பக்குடி: பொதுப்பாதை ஆக்கிரமிப்பை மீட்டுத் தர கோரிக்கை
கறம்பக்குடி அடுத்த செங்கமேடு ஊராட்சியில் பத்துத்தாக்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பள்ளம் தோண்டி தடை செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.