சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவர் கைது!

62பார்த்தது
சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார் TATA 407 வாகனத்தில் ஒரு யூனிட் மணல் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அறந்தாங்கி அருகே பணிக்கண் வயலைச் சேர்ந்த விஜயன் (28), வாகனத்தின் உரிமையாளர் அறந்தாங்கி கோட்டை 8-வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி