புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள பாதம்பட்டியில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக செந்தில்குமார்(45)ஒட்டி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 3 யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.